sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஒரே வேலை; சம்பளத்தில் பாரபட்சம் வேதனையில் விசிட்டிங் பயிற்சியாளர்கள்

/

ஒரே வேலை; சம்பளத்தில் பாரபட்சம் வேதனையில் விசிட்டிங் பயிற்சியாளர்கள்

ஒரே வேலை; சம்பளத்தில் பாரபட்சம் வேதனையில் விசிட்டிங் பயிற்சியாளர்கள்

ஒரே வேலை; சம்பளத்தில் பாரபட்சம் வேதனையில் விசிட்டிங் பயிற்சியாளர்கள்


UPDATED : ஜன 31, 2025 12:00 AM

ADDED : ஜன 31, 2025 10:03 AM

Google News

UPDATED : ஜன 31, 2025 12:00 AM ADDED : ஜன 31, 2025 10:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான, எஸ்.டி.ஏ.டி.,யில் நியமிக்கப்பட்டுள்ள, விசிட்டிங் பயிற்சியாளர்களுக்கு, ரெகுலர் மற்றும் கான்ட்ராக்ட் பயிற்சியாளர்களை விட சம்பளம் குறைவாக வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

தேசிய விளையாட்டு நிறுவனமான, என்.ஐ.எஸ்.,சில் குறிப்பிட்ட விளையாட்டுக்கான ஓராண்டு டிப்ளமோ பயிற்சி முடித்தவர்கள் மற்றும் சர்டிபிகேட் பயிற்சி முடித்தவர்கள், பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

தற்காலிக நியமனம்


நீண்ட நாட்களாக காலிப்பணியிடம் இருந்ததால், 2004ல், 80 பேர் ஒப்பந்த அடிப்படையில், எஸ்.டி.ஏ.டி.,யின் கீழ், அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகங்களிலும், விளையாட்டு விடுதிகளிலும் பயிற்சி யாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதில், என்.ஐ.எஸ்., டிப்ளமோ முடித்த சிலர், 2012ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். சர்டிபிகேட் பயிற்சி முடித்தவர்கள், தொடர்ந்து கூடுதல் சம்பளத்தில், தற்போது வரை ஒப்பந்த பயிற்சியாளர்களாகவே உள்ளனர்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி, சிலர் வழக்கு தொடர்ந்ததால், ஒப்பந்த பயிற்சியாளர்கள் என்பதற்கு பதிலாக, 'விசிட்டிங்' பயிற்சியாளர்கள் என்ற அடிப்படையில், பத்தாண்டுகளுக்கு முன், 200க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் கூறியதாவது:



தற்போது ஆணையத்தின் கீழ், ரெகுலர், ஒப்பந்த பயிற்சியாளர்கள் மற்றும் விசிட்டிங் பயிற்சியாளர்கள் என்ற பெயரில், மூன்று வித சம்பளம் வழங்கப்படுகிறது.

விசிட்டிங் பயிற்சியாளர்களாகிய எங்களுக்கு, 20,000 ரூபாய் சம்பளம். மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது, அவர்களின் சாதனைகளை மேம்படுத்துவது என, மூன்று பயிற்சியாளர்களுக்கும் ஒரே விதமான வேலை தான் தரப்படுகிறது.

காலை 6:30க்கு சென்று, 9:30 மணி வரையும், மாலை 4:30க்கு சென்று, இரவு 7:00 மணி வரையும் மாணவர்களுக்கு இருமுறை பயிற்சியும் தருகிறோம். காலை பயிற்சிக்கு பின் வீடு சென்று மீண்டும் மாலை வரவேண்டும் என்பதால், இருமுறை போக்குவரத்துக்கு செலவழிக்க வேண்டி உள்ளது.

ஒலிம்பிக் பயிற்சி மையங்களில் ரெகுலர் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.

என்.ஐ.எஸ்., படித்த விசிட்டிங் பயிற்சியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்; சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு ஒப்பந்த பயிற்சியாளர்களை போல மாதம், 30,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us