UPDATED : ஜன 08, 2025 12:00 AM
ADDED : ஜன 08, 2025 05:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னை ஐஐடி மாணவர்களால் நடத்தப்படும் 51ம் ஆண்டு சாரங் கலாச்சார விழா ஜனவரி 9 முதல் 13-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் 80,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறுகையில், இப்படிப்பட்ட நிகழ்வுகள் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி, இக்கல்வி நிறுவன வளாகத்தின் பன்முகத்தன்மைக்கு சான்றாகவும் விளங்குகிறது, என்றார்.

