சத்யவதி கல்லுாரி மாணவி புகார்; பேராசிரியருக்கு கட்டாய விடுப்பு
சத்யவதி கல்லுாரி மாணவி புகார்; பேராசிரியருக்கு கட்டாய விடுப்பு
UPDATED : நவ 13, 2026 11:29 AM
ADDED : நவ 13, 2026 11:30 AM
புதுடில்லி:
டில்லி பல்கலைக்கழகத்தின் சத்யவதி கல்லுாரியில், ஒரு மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பேராசிரியர் ஒருவர் கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:
டில்லி பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லுாரியாக உள்ள சத்யவதி கல்லுாரியில், அடுத்த துணை முதல்வர் பதவிக்கு விண்ணப்பிப்பார் என்று, பேராசிரியர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பேராசிரியர் மீது திடீர் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இந்த பேராசிரியர் மீது மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரை கட்டாய விடுப்பில் செல்லுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. குறிப்பிட்ட அந்த மாணவிக்கு, பேராசிரியர், ச ஆதத் ஹசன் மட்டோவின் படைப்புகளை அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது வழக்கமான கல்வி நடவடிக்கையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், குறிப்பிட்ட மாணவியின் புகாரின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புகார், கல்லுாரியின் உள் புகார் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
சில நாட்களுக்கு முன்பு, டில்லி பல்கலைக்கழகத்தின் தவுலத் ராம் கல்லுாரியை சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர், பாலியல் துன்புறுத்தல், அத்துமீறல், கல்வி ரீதியான பழிவாங்கல் தொடர்பான புகாரில், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
