sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

காவலர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பிக்கலாம்

/

காவலர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பிக்கலாம்

காவலர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பிக்கலாம்

காவலர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜன 24, 2026 04:52 PM

ADDED : ஜன 24, 2026 04:53 PM

Google News

UPDATED : ஜன 24, 2026 04:52 PM ADDED : ஜன 24, 2026 04:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
காவலர் பணிக்காக நடத்தப்படும் இலவச சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், புதுச்சேரி மாநிலத்தில் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு காவலர் பணியில் சேருவதற்கான எழுத்துத் தேர்வுக்கு இலவச சிறப்பு பயிற்சி வகுப்பினை வரும் 28ம் தேதி முதல் நடத்த உள்ளது.

அனைத்து வாரநாட்களிலும் இந்த சிறப்பு வகுப்புகள் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.

இந்த சிறப்புப் பயிற்சி வகுப்பில் அனைத்து பாடங்களிலும் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு, வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயில விருப்பமுள்ள மாணவர்கள் புதுச்சேரி நடேசன் நகர், மூன்றாவது குறுக்கு தெருவில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு 0413 2200115, 8870073622 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.






      Dinamalar
      Follow us