UPDATED : மே 29, 2024 12:00 AM
ADDED : மே 29, 2024 08:01 AM
விழுப்புரம்:
மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகை பெற விழுப்புரம் மாவட்ட பழங்குடியின மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகம் அறிவிப்பின் பேரில், இந்தாண்டிற்கான முதுநிலை, பி.எச்டி., முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்புகளை வெளிநாடுகளில் தொடர தேர்வு செய்யப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது தொடர்பாக, https://overseas.tribal.gov.in/ மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 31ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர், https://overseas.tribal.gov.in/ அமைச்சகத்தின் போர்டலை பார்வையிடலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.