பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
UPDATED : செப் 02, 2026 05:46 PM
ADDED : செப் 02, 2026 05:48 PM
கோவை:
பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் பி.எம்., யசஸ்வி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2026 - 27 கல்வியாண்டில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் தமிழகத்தை சேர்ந்த தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணமாக ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.75 ஆயிரம், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வழங்கப்படுகிறது. 30 சதவீதம் மாணவியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல், சென்ற கல்வியாண்டில் உதவித்தொகை பெற்ற 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், புதுப்பித்தலுக்காக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பத்தை உறுதி செய்து, செப்., 15க்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, பிளஸ் 1 மாணவர்களுக்கான விண்ணப்ப தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தை அணுகலாம்.
