தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.சி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பி.சி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பி.சி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


UPDATED : செப் 23, 2026 06:06 PM

ADDED : செப் 23, 2026 06:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 06:06 PM ADDED : செப் 23, 2026 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டம், பட்ட மேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கற்பித்தல் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல அலுவலகத்திலும், www.bcw.tn.gov.in என்ற இணையதளத்திலும் பெறலாம்.

மத்திய, மாநில அரசுகளின் இதர கல்வி உதவித்தொகை திட்டங்களில் பயன்பெறும் மாணவர்கள் , இத்திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இணைத்து, சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு வரும் நவ., 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us