UPDATED : ஜூன் 19, 2024 12:00 AM
ADDED : ஜூன் 19, 2024 12:49 PM

2024 - 25ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
2023 - 24ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு பயின்று நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு விபரம்:
தமிழக அரசின் 9ம் மற்றும் 10ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. மொத்தம் இரண்டு தாள்கள் கொள்குறி வகையில் இடம்பெறும். முதல் தாளில் கணிதப் பாடத்தில் 60 கேள்விகளும், இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 60 கேள்விகளும் கேட்கப்படுகிறது.
உதவித்தொகை:
இத்தேர்வின் வாயிலாக தலா 500 மாணவர்கள் மற்றும் மாணவிகள் வீதம் மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
https://apply1.tndge.org/dge-notification/TCMTSE எனும் இணையதளத்தில் இருந்து விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அவரவர் பள்ளி தலைமையாசியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 26
விபரங்களுக்கு:
www.dge.tn.gov.in

