UPDATED : அக் 24, 2024 12:00 AM
ADDED : அக் 24, 2024 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் :
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. சென்ற வருடம் நடைபெற்ற தேசிய வருவாய் மற்றும் திறன் வழி கல்வி உதவித்தொகை தேர்வில் (என்.எம்.எம்.எஸ்.), இப்பள்ளி மாணவி மோனிகா தேர்ச்சி பெற்றார். இவர் தற்போது 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
மோனிகா பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் பில்லூர்டேம் அருகிலுள்ள மானார் என்ற குக்கிராமத்தை சார்ந்தவர். இவருடைய பெற்றோர் கூலிவேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவிக்கு ஆண்டு தோறும் ரூ.12,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்கும்.
இம்மாணவியை, பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினார்கள்.