UPDATED : அக் 22, 2026 05:53 PM
ADDED : அக் 22, 2026 05:54 PM
கோவை:
திட்டம் 1, 2, 3, 4, பேரூர், சூலூர், சுல்தான்பேட்டை, அன்னூர், கிணத்துக்கடவு, வால்பாறை, காரமடை உள்ளிட்ட 18 வட்டாரங்களில் 1,444 அங்கன்வாடி மையங்களும், 16 குறு அங்கன்வாடி மையங்களும் உள்ளன. மாநகராட்சியில் 300க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
2025 - 2026 கல்வியாண்டில் 34,086 குழந்தைகள் சேர்ந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் 34,350 குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
விஜயதசமியை முன்னிட்டு நடந்த மாணவர் சேர்க்கையில், திட்டம் 4க்கு உட்பட்ட சிங்காநல்லுார் அம்மன்குளம் அங்கன்வாடியில் 7 குழந்தைகளும், அம்மன்குளம் நியூ ஹவுசிங் யூனிட் மையத்தில் 4, புலியகுளம் வி.வி.சி., மாநகராட்சி ஆரம்பப் பள்ளி அங்கன்வாடியில் 6, வாட்டர் டேங்க் அங்கன்வாடியில் 5 பேர் சேர்ந்தனர்.
