UPDATED : மார் 24, 2026 10:59 AM
ADDED : மார் 24, 2026 11:01 AM

அ நிறம் | அளவு
கீழக்கரை:
கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே., நாடார் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் செய்யது ராசிக்தீன் தலைமை வகித்தார். நிர்வாக பொதுச் செயலாளர் மற்றும் பள்ளித் தாளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாக அலுவலர் சுரேஷ் பாண்டியன் வரவேற்றார்.
சங்கத் தலைவர் மாடசாமி, பொருளாளர் பஞ்சாட்சரம், கீழக்கரை ரோட்டரி சங்க செயலாளர் சதீஷ், தலைவர் சிவகார்த்திக் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.
