தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளியில் விழிப்புணர்வு


UPDATED : நவ 03, 2026 03:13 PM

ADDED : நவ 03, 2026 03:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 03:13 PM ADDED : நவ 03, 2026 03:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரவக்குறிச்சி அருகே தொக்குப்பட்டி புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம், செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி மாணவர்கள் பட்டாசு வெடிக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக கையாள வேண்டும், பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீர், மணல் வாளிகளை வைத்திருக்க வேண்டும்.

வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்ற வைக்கக் கூடாது, திறந்தவெளியில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் வெடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அறிவுரை வழங்கப்பட்டது.

பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள்வது, தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடு வதுடன், தீ விபத்து மற்றும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, மக்கள் அனைவரும் தீயணைப்பு துறையினர் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us