UPDATED : ஏப் 16, 2026 07:01 PM
ADDED : ஏப் 16, 2026 07:03 PM

அலங்காநல்லுார்:
அலங்காநல்லுார் ஒன்றியம் கோணப்பட்டியில் துவக்கப் பள்ளி கட்டடம் சேதமடைந்ததால் மாணவர்கள் தகர செட்டில் அமர்ந்து படிக்கின்றனர்.
அவ்வூர் லட்சுமி கூறியதாவது:
2001ல் கரும்பலகை திட்டத்தில் கட்டிய வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்தன. உரிய பராமரிப்பின்றி வகுப்பறைக்குள் மேற் பூச்சுக்கள் உதிர துவங்கியதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. இதனால் கிராம மந்தையில் திருவிழா காலங்களில் பயன்படுத்தப்படும் தகர கொட்டகையின் கீழ் வகுப்புகள் நடக்கிறது.
1960களில் கட்டிய பள்ளி கட்டடம் பழுதடைந்து ஒரு வருடத்திற்கு முன் இடிக்கப்பட்டது. ஆனால் 2001ல் கட்டிய கட்டடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. கடும் வெயிலில் தகர செட்டின் கீழ் அமர்ந்து படிக்க மாணவர்கள் சிரமப்படுகின்றனர். கழிப்பறை வசதிகள் இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
