தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை


UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM

ADDED : ஜூன் 28, 2024 07:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM ADDED : ஜூன் 28, 2024 07:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத மேலும் 33 தனியார் பள்ளிகள் பட்டியலை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என, எச்சரித்துள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி, பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது, ஆய்வு செய்ததில் தெரிய வந்ததுள்ளது. அது சட்டத்துக்கு முரணானது. முதல் கட்டமாக அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூடுமாறு கடந்த ஆண்டு டிச., 15ம் தேதி பள்ளிக் கல்வித் துறை யானது உத்தரவிட்டது.

மேலும், அத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் எனவும் அறிவுறித்தியது.அதனைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக மேலும் 33 அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு பள்ளிக் கல்வித் துறை நேற்று உத்தரவிட்டது.

எனவே, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏதேனும் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டால், பள்ளி நிர்வாகமோ அல்லது பெற்றோர்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையின் போது, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் முறையான அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அங்கீகாரம் இல்லாமல் பள்ளியை நடத்துவது, புதுச்சேரி பள்ளிக் கல்விச் சட்டம், மற்றும் புதுச்சேரி பள்ளிக் கல்வி விதிகளை மீறுவதாகும்.

அபராதம்


குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டத்தின்படி அங்கீகாரச் சான்றிதழைப் பெறாமல் பள்ளியை தொடர்ந்து நடத்துபவர், அங்கீகாரத்தை திரும்பப் பெற்ற பிறகு, ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதம் விதிக்கப்படும்.

மேலும் தொடர்ந்து விதி மீறல்கள் இருந்தால், அத்தகைய மீறல் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us