மாணவருக்கு கல்விக் கட்டணம்: கலெக்டர் விருப்ப நிதி வழங்கல்
மாணவருக்கு கல்விக் கட்டணம்: கலெக்டர் விருப்ப நிதி வழங்கல்
UPDATED : ஆக 07, 2026 04:49 PM
ADDED : ஆக 07, 2026 04:51 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குவாலியர் ஐ.ஐ.டி.எம்., நிறுவனத்தில் உயர்கல்வி சேர்க்கை பெற்ற தியாகதுருகம் அரசு பள்ளி மாணவருக்கு முதலாம் ஆண்டு கல்விக்கான கட்டணத்தை கலெக்டர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீத உயர்கல்வி சேர்க்கை பெறுவதற்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முகாமில் பங்கேற்ற தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் விக்னேஷ், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரியல் இயங்கி வரும் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் உயர்கல்வி சேர்க்கை பெற்றுள்ளார்.
இவருக்கான முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் 70 ஆயிரத்து 700 ரூபாயை கலெக்டர் பத்மஜா தன் விருப்ப நிதியிலிருந்து வழங்கினார்.
