UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM
ADDED : ஜூலை 27, 2024 09:53 AM
சென்னை:
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம், அனைத்து அரசு பள்ளிகளிலும், ஆக., 2ம் தேதி நடத்தப்பட வேண்டும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்து உள்ளார்.
சென்னை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, அனைத்து அரசு பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழுவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, 24 புதிய உறுப்பினர்களுடன் செயல்பட உள்ளது. அந்த வகையில், வரும் ஆக., 10ம் முதல் 31ம் தேதி வரை, நான்கு கட்டங்களாக மறு கட்டமைப்பு நடக்க உள்ளது.
இதற்கான விழிப்புணர்வு திட்டமிடல் கூட்டம், ஆக., 2ம் தேதி, அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும். கூட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்க வேண்டும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்து உள்ளார்.

