UPDATED : அக் 28, 2026 05:51 PM
ADDED : அக் 28, 2026 05:52 PM
அன்னூர்:
ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடந்தது.
வட்டார வளமைய ஆசிரியர் சாந்தி தேர்தல் நடத்தும் பார்வையாளராக செயல்பட்டார். தலைமை ஆசிரியை சரவணா தேவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பள்ளி நிர்வாகிகள் பேசுகையில், “பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதிலும், பள்ளி வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். மேலாண்மை குழு கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அவ்வப்போது அரசு தெரிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்,” என்றனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவராக சாவித்திரி, துணைத்தலைவராக ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதி மொழி ஏற்றனர். மேலாண்மை குழு உறுப்பினர்கள் பேசுகையில், 'பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவோம்,' என்றனர்.
