UPDATED : மே 17, 2024 12:00 AM
ADDED : மே 17, 2024 05:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா:
பீகாரில் பாட்னாவில் உள்ள தனியார் ஆரம்ப பள்ளியில் ஒரு குழந்தை வீடு திரும்பாததால் ஆத்திரமுற்ற உறவினர்கள் பள்ளிக்கு தீ வைத்தனர்.
காலையில் பள்ளிக்கு சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை என்றதும் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளி முன்பு கூடினர். தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.
இது குறித்து போலீஸ் எஸ்பி சந்திரபிரகாஷ் கூறுகையில், குழந்தை பள்ளி வளாகத்தில் பிணமாக கிடந்துள்ளது. இந்த பிணத்தை ஒரு இடத்தில் சிலர் மறைத்து வைத்துள்ளனர். தற்போது ஆரம்ப கட்ட விசாரணை நடக்கிறது. சந்தேகத்திற்கு இடமான 3 பேரிடம் விசாரித்து வருகிறோம். முழு விவரம் இன்னும் அறியப்படவில்லை என்றார்.