UPDATED : மார் 19, 2025 12:00 AM
ADDED : மார் 19, 2025 09:32 AM

மதுரை :
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரின் வருகையை கொண்டாடும் வகையில் மதுரை சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்கள் நேற்று பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் 6, 7, 8 ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். டிவியில் அவர்கள் வருகை குறித்து லைவ் செய்யப்பட்ட நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு சுனிதாவிற்கு உற்சாகமாக வாழ்த்துகள் கூறி மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்போது அப்துல்கலாம், கலிலியோ, ஐன்ஸ்டீன், சி.வி.ராமன் உள்ளிட்ட விஞ்ஞானிகளின் முகமூடிகளை அணிந்துகொண்டனர்.
தலைமையாசிரியர் கூறுகையில், விண்வெளி ஸ்டேஷன்கள், எத்தனை பேர் விண்வெளிக்கு சென்றனர், அவர்கள் எவ்வாறு திரும்பிக்கொண்டிருக்கின்றனர் போன்றவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது. ஏற்கனவே எங்கள் பள்ளி மாணவர்கள் செப்.19ல் சுனிதா பிறந்த நாளை கொண்டாடி நாசாவிற்கு இமெயில் மூலம் வாழ்த்துகளை அனுப்பினர் என்றார்.