தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுற்றுச்சூழல் காக்க காகித பை பள்ளி மாணவர்கள் தயாரிப்பு

சுற்றுச்சூழல் காக்க காகித பை பள்ளி மாணவர்கள் தயாரிப்பு

சுற்றுச்சூழல் காக்க காகித பை பள்ளி மாணவர்கள் தயாரிப்பு


UPDATED : ஆக 26, 2026 06:09 PM

ADDED : ஆக 26, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2026 06:09 PM ADDED : ஆக 26, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் காகித பை தயாரிப்பில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு காலநிலை மாற்றம் பசுமைப்பள்ளி திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியருக்கு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அவ்வகையில், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பிளாஸ்டிக் பைகளை குறைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த, காகிதப்பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இயற்கையை பாதுகாப்போம் என்ற கருத்தை கொண்டு, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை குறைத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை மீண்டும் பயன்படுத்த ஊக்குவித்தல், பள்ளி மற்றும் சமூகத்தின் மீது பசுமையான பழக்கவழக்கங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களை உள்ளடக்கி, இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஏற்பாடுகளை பள்ளியின் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி ஒருங்கிணைத்தார்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us