sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி மாணவர்கள் பஸ் பாஸ் விஷயத்தில் பஞ்சு மூட்டை கோடவுன்லே இருந்திருக்கலாம்!

/

பள்ளி மாணவர்கள் பஸ் பாஸ் விஷயத்தில் பஞ்சு மூட்டை கோடவுன்லே இருந்திருக்கலாம்!

பள்ளி மாணவர்கள் பஸ் பாஸ் விஷயத்தில் பஞ்சு மூட்டை கோடவுன்லே இருந்திருக்கலாம்!

பள்ளி மாணவர்கள் பஸ் பாஸ் விஷயத்தில் பஞ்சு மூட்டை கோடவுன்லே இருந்திருக்கலாம்!


UPDATED : ஜூலை 28, 2025 12:00 AM

ADDED : ஜூலை 28, 2025 09:22 AM

Google News

UPDATED : ஜூலை 28, 2025 12:00 AM ADDED : ஜூலை 28, 2025 09:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அரசு, உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் 2 ஆண்டுகளாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை எமிஸ் தளம் வழியே அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் விவரத்தை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் இருந்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து கிளை அலுவலகங்களே விவரம் பெற்று பாஸ் வழங்குகிறது.

இந்தாண்டு இதற்கான பதிவேற்றம் தற்போது நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக பஸ் பாஸ் தேவைப்படும் விருப்பம் உள்ள மாணவர் விவரம் பதிவேற்றம் செய்யும் நடைமுறை இருந்தது. ஆனால் ஜூலை 2ல் அனைத்து மாணவர்கள் விபரத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என இணை இயக்குநர் (தொழில்கல்வி) அறிவுறுத்தினார்.

இதன்படி அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பெயர், விவரம், போட்டோ, பயணம் எங்கிருந்து எங்குவரை உள்ளிட்ட ஏராளமான தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆசிரியர், தலைமையாசிரியர்களுக்கு இது பெரும் சவாலாக இருந்தது. இந்நிலையில், மீண்டும் பஸ் பாஸ் தேவைப்படும் விருப்ப மாணவர்கள் விவரத்தை பதிவேற்றம் செய்தால் போதும். தேவையில்லாத மாணவர்களை நீக்க வேண்டும் என ஜூலை 23ல் இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், அரசு பஸ் பாஸ் விண்ணப்பிக்கும் விஷயத்தில் ஒன்றுக்கு இரண்டு வேலை செய்வது போல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் மனஉளைச்சல் தான் ஏற்பட்டது.

சினிமா ஒன்றில், அதற்கு பஞ்சு மூட்டை கோடவுன்லேயே இருந்திருக்கலாம்ல... என நகைச்சுவை வசனம் வரும். கல்வித்துறை நடவடிக்கையால் அதுதான் நினைவுக்கு வருகிறது என அதிருப்தி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us