தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடுப்பு முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவியருக்கு வரவேற்பு

விடுப்பு முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவியருக்கு வரவேற்பு

விடுப்பு முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவியருக்கு வரவேற்பு


UPDATED : ஜூன் 05, 2026 07:58 PM

ADDED : ஜூன் 05, 2026 07:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2026 07:58 PM ADDED : ஜூன் 05, 2026 07:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாநகராட்சி, அரசு, அதன் உதவி பெறுபவை, தனியார் பள்ளிகளில், மாணவர்களை, ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., உள்ளிட்ட தொடக்க வகுப்புகளில், குழந்தைகளை அழைத்துக் கொண்டு, பெற்றோரும் பள்ளிக்கு வந்தனர். பல குழந்தைகள், வகுப்பறைக்கு செல்லாமல் அடம்பிடித்து அழுதனர்.

சேலம் மாவட்டத்தில் அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில், 2.1 லட்சம் மாணவ, மாணவியர், ஆங்கில வழியில், 1.09 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கு, பள்ளி திறந்த முதல் நாளான நேற்றே, பாடப்புத்தகங்கள், சீருடை, நோட்டுப்புத்தகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

கொண்டப்பநாயக்கன்பட்டி துவக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பில், 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்கள் நேற்று, முதல்முறை பள்ளிக்கு வந்த போது, ரோஜா பூ கொடுத்து, சந்தனம் பூசி திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 'கேக்' வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் நெல் மணிகளில், 'அ' எழுதி கல்வியை தொடங்கி வைத்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us