தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் திறப்பு மாணவர் உற்சாகம்

பள்ளிகள் திறப்பு மாணவர் உற்சாகம்

பள்ளிகள் திறப்பு மாணவர் உற்சாகம்


UPDATED : அக் 06, 2026 01:28 PM

ADDED : அக் 06, 2026 01:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 01:28 PM ADDED : அக் 06, 2026 01:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
ஒன்பது நாள் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவ, மாணவியருக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், இறைவணக்க கூட்டத்துக்கு பிறகு வகுப்பாசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. காலாண்டு தேர்வு விடைத்தாள்களும் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மதிப்பெண் விவரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 1.16 லட்சம் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, மீதமுள்ள புத்தகங்களை இந்த வார இறுதிக்குள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உபரியாக உள்ள புத்தகங்களை வரும் 10ம் தேதி கல்வி அலுவலகங்களுக்கு திருப்பி அனுப்பவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய புத்தகங்கள் கைகளில்... மாணவர் முகங்களில் உற்சாகம்... விடுமுறைக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்றது பள்ளி வளாகம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us