தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவ, மாணவியர் அறிவியல் சார்ந்த கல்விச்சுற்றுலா

அரசு பள்ளி மாணவ, மாணவியர் அறிவியல் சார்ந்த கல்விச்சுற்றுலா

அரசு பள்ளி மாணவ, மாணவியர் அறிவியல் சார்ந்த கல்விச்சுற்றுலா


UPDATED : நவ 13, 2025 07:09 AM

ADDED : நவ 13, 2025 07:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2025 07:09 AM ADDED : நவ 13, 2025 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
அரசு பள்ளிகளில், 9 முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரை, ஸ்டெம் திட்டத்தில், அறிவியல் சார்ந்த கல்விச்சுற்றுலா நடத்த, தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டம் மூலம், பள்ளி மாணவ, மாணவியர், அறிவியல் அருங்காட்சியகம், கோளரங்கம், உயர்கல்வி நிறுவனம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களை பார்வையிட்டு, அங்குள்ள நடைமுறைகளை அறியவும், அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்க்கவும், படைப்பாற்றல் சிந்தனைகளை துாண்டவும், அறி-வியல் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை உருவாக்கவும் கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 163 அரசு உயர்நிலை மற்றும், 110 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 9, முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், 702 பேரை, 3 நாள் அறிவியல் சார்ந்த கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றனர்.

இம்மாணவ, மாணவியர், வழி துணை ஆசிரியர்களுடன், ஆந்திரா மாநிலம் அகஸ்தியா பவுண்டேசன் மற்றும் கர்நாடகா மாநிலம் விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு சென்றனர்.

மாணவ, மாணவியர் சென்ற, 2 பஸ்களை, சி.இ.ஓ., மதன்குமார், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் இருந்து வழி அனுப்பி வைத்தார்.

இதற்கான ஏற்பாடுகளை, உதவி திட்ட அலுவலர் மகேந்திரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர். இதில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us