sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இயற்கை விவசாயிகளுக்கு மண்புழுக்கள் சொன்ன அறிவியல் ரகசியம்; அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த ஆய்வு வெளியீடு

/

இயற்கை விவசாயிகளுக்கு மண்புழுக்கள் சொன்ன அறிவியல் ரகசியம்; அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த ஆய்வு வெளியீடு

இயற்கை விவசாயிகளுக்கு மண்புழுக்கள் சொன்ன அறிவியல் ரகசியம்; அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த ஆய்வு வெளியீடு

இயற்கை விவசாயிகளுக்கு மண்புழுக்கள் சொன்ன அறிவியல் ரகசியம்; அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த ஆய்வு வெளியீடு


UPDATED : பிப் 15, 2026 11:08 AM

ADDED : பிப் 15, 2026 11:12 AM

Google News

UPDATED : பிப் 15, 2026 11:08 AM ADDED : பிப் 15, 2026 11:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்ணை புரட்டிப் பார்த்தால் கிடைப்பது வெறும் மண் அல்ல… அதற்குள் உயிர் இருக்கிறது. அந்த உயிர் தான் மண்புழு. இயற்கை விவசாயத்தின் அடித்தளம் என்று சொல்லப்படும் இந்த மண்புழுக்கள், உண்மையில் எந்த இனம் அதிக உரம் தரும். எது வேகமாக பெருகும் என்ற கேள்விகளுக்கு விடை தேடியுள்ளனர் புதுச்சேரி பிள்ளைச்சாவடி வரதன் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.

அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஹர்ஷிதா, சஷ்வந்த், சுஸ்மிதா ஆகியோர் இந்த மண்ணையும் அறிவியலையும் இணைத்து ஒரு சுவாரசியமான ஆய்வை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்விற்கு வழிகாட்டியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் சுரேஷ். படித்தாலே போதாது… பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் விதைத்துள்ள ஆசிரியர் சுரேஷ் ஆய்வு முடிவுகளை கூறியதாவது;

மண்ணின் உயிர்துடிப்பாக விளங்கும் மண்புழுக்கள், விவசாயத்தின் அடித்தளமாகக் கருதப்படுகின்றன. மண்ணை உயிர்ப்பிக்கவும், இயற்கை உரத்தை உருவாக்கவும் அவை ஆற்றும் பங்கு அளவிட முடியாதது.

அந்த வகையில், மாட்டு சாணம் கரைசலை ஒரே உணவாகக் கொண்டு, மூன்று விதமான மண்புழு இனங்களின் செயல்திறனை ஒப்பிட்டு அறியும் முயற்சியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் யூட்ரிலஸ் யூனீயே (Eudrilus eugeniae), ஐசீநியாபெடிடா (Eisenia fetida), லம்ப்பிரிகஸ் டெரெஸ்ட்ரிஸ் (Lumbricus terrestris) எனும் மூன்று மண்புழு இனங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு இனமும் தனித்தனி கலன்களில் வளர்க்கப்பட்டு, ஒரே அளவு உணவு, ஒரே சுற்றுச்சூழல் நிலை, மற்றும் 50 நாட்கள் ஒரே கால அளவு என ஒரே மாதிரியான சூழ்நிலைகள் வழங்கப்பட்டன.

யூட்ரிலஸ் யூனீயே இந்த இனம், உரம் உற்பத்தியில் ஒரு உழைப்பாளி போல செயல்பட்டது. வழங்கப்பட்ட மாட்டு சாணம் கரைசலை வேகமாக சிதைத்து, குறுகிய காலத்திலேயே அதிக அளவு மண்புழு உரத்தை உருவாக்கியது. மண்ணுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திறன் இதில் மிக அதிகமாக காணப்பட்டது. அதிக உரம் - அதிக விளைச்சல் என்பதற்கு ஏற்ற தேர்வு.

ஐசீநியாபெடிடா இந்த இனம், பெருக்கத்தில் ஒரு வேகப்பந்தய வீரர் போல செயல்பட்டது. குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் மண்புழுக்கள் உருவாகி, இனப்பெருக்க திறனில் சிறந்து விளங்கியது. உரம் உற்பத்தி நல்ல நிலையில் இருந்தாலும், அதன் மிகப்பெரிய பலம் வேகமான வளர்ச்சியும் பெருக்கமும் ஆகும். புழு எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்க வேண்டுமெனில் சிறந்த தேர்வு.

லம்ப்பிரிகஸ் டெரெஸ்ட்ரிஸ் இனம், இயற்கையில் ஆழமான மண்ணில் வாழ்வதற்கு ஏற்றது. சிறிய குடுவை சூழலில் இதன் வளர்ச்சி மந்தமாக இருந்தது. உர உற்பத்தியும், பெருக்கமும் குறைவாகக் காணப்பட்டது. ஆனால், பரந்த நிலப்பரப்பில், இயற்கை சூழலில் வளர்த்தால், இதன் முழுத் திறனும் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. சிறிய குடுவைகளுக்கு பொருத்தமில்லை; பெரிய நிலங்களுக்கு ஏற்றது.

50 நாட்கள் நடைபெற்ற இந்த ஒப்பீட்டு ஆய்வு, ஒவ்வொரு மண்புழு இனத்துக்கும் தனித்தனி சிறப்புகள் இருப்பதை வெளிப்படுத்தியது. அத்துடன் பிரான்சில் உள்ள பாரீஸ் பல்கலைக்கழகம் நடத்திய மேக் சயின்ஸ் அறிவியல் ஆய்வு போட்டியில் இரண்டாம் பரிசு வென்றுள்ளது. மண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றால், மண்புழுக்களைப் புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைச்சாவடி அரசு பள்ளியில் இந்த சிறிய ஆய்வு, இயற்கை விவசாயத்திற்கு ஒரு பெரிய வழிகாட்டி என்றார்.






      Dinamalar
      Follow us