sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அங்கீகாரம் இல்லாத இன்ஜி., கல்லுாரிகளில் மாணவ - மாணவியருக்கு சீட் ஒதுக்கீடு

/

அங்கீகாரம் இல்லாத இன்ஜி., கல்லுாரிகளில் மாணவ - மாணவியருக்கு சீட் ஒதுக்கீடு

அங்கீகாரம் இல்லாத இன்ஜி., கல்லுாரிகளில் மாணவ - மாணவியருக்கு சீட் ஒதுக்கீடு

அங்கீகாரம் இல்லாத இன்ஜி., கல்லுாரிகளில் மாணவ - மாணவியருக்கு சீட் ஒதுக்கீடு


UPDATED : ஆக 08, 2025 12:00 AM

ADDED : ஆக 08, 2025 06:46 PM

Google News

UPDATED : ஆக 08, 2025 12:00 AM ADDED : ஆக 08, 2025 06:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
இன்ஜினியரிங் இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில், அங்கீகாரம் இல்லாத கல்லுாரிகளில், மாணவ - மாணவியருக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, கவுன்சிலிங் குளறுபடியே காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.

நிறைவு பெற்றது


அண்ணா பல்கலையின் கீழ், 423 இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 1.87 லட்சம் பி.இ., பி.டெக் இடங்கள் உள்ளன. இவற்றுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் கடந்த மாதம் 7ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடந்தது.

அதில், பொதுப் பிரிவில் 26,719 மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 2,177 மாணவ - மாணவியர் என, மொத்தம் 28,896 மாணவ - மாணவியருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இரண்டாம் சுற்று கவுன்சிலிங் கடந்த 26ல் துவங்கி, நேற்று நிறைவு பெற்றது. இதில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 9,633 மற்றும் பொதுப் பிரிவில் 52,694 மாணவ - மாணவியர் என, மொத்தம் 62,327 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இரண்டாம் சுற்று முடிவில் மொத்தம் 92,279 பி.இ., - பி.டெக் இடங்கள் நிரம்பின. இரண்டாம் சுற்றில், அங்கீகாரம் இல்லாத கல்லுாரிகளில் மாணவ - மாணவியருக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது, மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழிப்புணர்வு இல்லை


இது குறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், இன்ஜி., இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியர் கூட தரமற்ற கல்லுாரிகளை தேர்வு செய்திருக்கின்றனர். 190 கட் ஆப் மதிப்பெண் பெற்ற 166 மாணவ - மாணவியர் இரண்டாம் சுற்றில் பங்கேற்று சீட் பெற்றுள்ளனர்.

இது, கல்லுாரியை தேர்வு செய்வதில் அவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததை காட்டுகிறது, என்றார்.

கல்வியாளர் அஸ்வின் கூறுகையில், அண்ணா பல்கலையின் அங்கீகாரம் இல்லாத ஐந்து கல்லுாரிகள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளன. அவற்றை மாணவ - மாணவியர் தேர்வு செய்ததால், 31 பேருக்கு அந்த கல்லுாரிகளில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள், அங்கீகாரமற்ற கல்லுாரியில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவ - மாணவியருக்கு, அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்றாற்போல, வேறு கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்றனர்.

22 கல்லுாரிகளில் சேர்க்கை பூஜ்யம்


இரண்டாம் சுற்று கவுன்சிலிங் முடிவில், 22 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஒரு மாணவர் கூட சீட் பெறவில்லை. 147 கல்லுாரிகளில், 50 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.






      Dinamalar
      Follow us