UPDATED : ஆக 26, 2024 12:00 AM
ADDED : ஆக 26, 2024 10:27 AM
ராசிபுரம்:
ராசிபுரம், ஆண்டகளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லுாரி உள்ளது. இங்கு, தொட்டிப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் தங்கராஜ், 23, என்ற மாணவன், கடந்தாண்டு இளங்கலையில் பட்டப் படிப்பு முடித்தார்.
தற்போது, முதுகலையில் வரலாறு பிரிவில் படிக்க, ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல் நடந்தது.
தங்கராஜ் கடந்த காலங்களில், கல்லுாரிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால், அவருக்கு தொடர்ந்து படிக்க, சீட் தர மறுத்துவிட்டனர். இதனால், எனது படிப்பு, எனது உரிமை என பதாகையில் எழுதி, கல்லுாரி முதல்வர் பானுமதி அறையில், நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் இதையடுத்து, நேற்று அவருக்கு முதுகலை வரலாறு பிரிவில், சீட் வழங்கப்பட்டது. இச்சம்பவத்தால், கல்லுாரியில் பரபரப்பு ஏற்பட்டது.