தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விண்வெளியில் செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

விண்வெளியில் செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

விண்வெளியில் செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்


UPDATED : ஏப் 21, 2025 12:00 AM

ADDED : ஏப் 21, 2025 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2025 12:00 AM ADDED : ஏப் 21, 2025 04:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
விண்வெளியில் செயற்கைக்கோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. மேலும், ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்ட பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

இதற்காக தலா 220 கிலோ எடை கொண்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரட்டை விண்கலன்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டன. இவ்விரு விண்கலன்களும் பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:


கடந்த ஜனவரி 16ம் தேதி, விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றி பெற்றது. தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி. அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us