தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரண்டாம் நிலை காவலர் தேர்வு; இலவச பயிற்சி பெற அழைப்பு

இரண்டாம் நிலை காவலர் தேர்வு; இலவச பயிற்சி பெற அழைப்பு

இரண்டாம் நிலை காவலர் தேர்வு; இலவச பயிற்சி பெற அழைப்பு


UPDATED : செப் 13, 2025 12:00 AM

ADDED : செப் 13, 2025 08:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2025 12:00 AM ADDED : செப் 13, 2025 08:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
'இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் காவலர் தேர்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு பயிற்சியில் பங்கேற்கலாம்'என, கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் உள்ளிட்ட 3,665 பதவிகளுக்கு, தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடக்கிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதியுடையவர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சி வகுப்புகள் ஆங்கிலம், தமிழில் நடத்தப்படும்.

ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, போட்டி தேர்வு புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பயிற்சி அட்டவணை, வாரத்தேர்வுகள், முழுமாதிரி தேர்வு ஆகியவற்றுடன் நடத்தப்படுகிறது. https://tamilnadu careerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக, பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பங்கேற்க விரும்புபவர்கள், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படத்துடன், கவுண்டம்பாளையத்தை அடுத்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு, 93615 76081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us