UPDATED : செப் 22, 2025 12:00 AM
ADDED : செப் 22, 2025 08:44 AM

சென்னை:
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சம வேலைக்கு சம ஊதி யம் வழங்காததை கண்டித்து, இடைநிலை ஆசிரியர்கள் வரும், 29ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.
பள்ளிக்கல்வி துறையில், 2009 மே, 31ம் தேதி வரை, இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தோருக்கு, அடிப்படை ஊதியமாக, 8,370 ரூபாய், அதே ஆண்டு ஜூன் 1ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு அடிப்படை ஊதியமாக, 5,200 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டது.
இந்த ஊதிய முரண்பாட்டை நீக்கி, 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என, இடைநிலை ஆசிரியர்கள் போராடிய நிலையில், தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், அதை நிறைவேற்றுவதாக கூறியது.
ஆனால், இன்னும் நிறைவேற்றாததால், சென்னையில் வரும் 29, 30ம் தேதிகளில், காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அறிவித்துஉள்ளது.