UPDATED : ஜன 06, 2026 06:54 PM
ADDED : ஜன 06, 2026 06:55 PM
விருதுநகர்:
விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் சார்பில் நேற்றுதொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சந்தனகலா முன்னிலை வகித்தார். வட்டார மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் லட்சுமி,மாநில செயற்குழு உறுப்பினர் குகபிரசாத் ஆகிய உட்பட பலர் பங்கேற்றனர்.
இவர்கள் கூறியதாவது:
“இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மிக மிக குறைந்த கடைநிலை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. தி.மு.க., ஆட்சி பெறுப்பேற்ற பின் 2023ல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடை களைய மூன்று நபர் குழுவை கொண்டு வந்தனர்.
மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' கிடைக்கும் வரை எங்கள் ஊதிய மீட்பு காத்திருப்பு போராட்டம் தொடரும்” என்றனர்.

