நவீன தொழில்நுட்பங்களுடன் தலைமைச் செயலகம்; மோடி பெருமிதம்!
நவீன தொழில்நுட்பங்களுடன் தலைமைச் செயலகம்; மோடி பெருமிதம்!
UPDATED : ஆக 08, 2025 12:00 AM
ADDED : ஆக 08, 2025 06:15 PM
புதுடில்லி:
டில்லியில் கர்தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில், வெளியுறவு அமைச்சகம் மற்றும் துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்படும். இதனால் அமைச்சகங்களுக்கு புதிய முகவரி கிடைக்க உள்ளது.
ரெய்சானா ஹில்ஸ் பகுதியில் நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் கட்டடங்களில் கடந்த 90 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய அமைச்சகங்கள் மற்றும் பிற துறை அலுவலகங்கள் எல்லாம் கர்தவ்யா பவனில் ஒரே இடத்தில் செயல்படும்.
இந்த கட்டடத்தின் சிறப்புகள் பின்வருமாறு:
* 1.5 லட்சம் சதுர மீட்டரில் 2 தரை தளங்கள், 7 அடுக்குமாடிகளுடன் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கர்தவ்யா பவன் அமைக்கப்பட்டு உள்ளது.
* 30 சதவீத மின்சார செலவை குறைக்கும் வகையில் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இந்த புதிய கட்டடங்கள், மத்திய அரசு அலுவலகங்களின் பராமரிப்பு செலவை குறைக்கும்.
* அதுமட்டுமின்றி பணிச் சூழல் மற்றும் ஊழியர்களின் நலன், சேவை ஆகியவற்றை மேம்படுத்தும்.
* நவீன கட்டடங்களுக்கு உதாரணமாக திகழும் கர்தவ்யா பவனில், ஊழியர்கள் அடையாள அட்டை மூலம் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.
புதிய கட்டடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அவருக்கு, இந்த கட்டடத்தில் சிறப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கர்தவ்ய பவனில் பத்து கட்டிடங்களைக் கட்ட திட்டமிட்டுள்ளது. முதல் கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். கட்டுமான பணி நடந்துவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டடத்தை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டிடங்கள் 6 மற்றும் 7ன் திட்டம் அக்டோபர் 2026க்குள் நிறைவடையும். முழு கட்டடமும் 2027ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.