பயிர் வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
பயிர் வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
UPDATED : நவ 10, 2026 01:08 PM
ADDED : நவ 10, 2026 01:09 PM
விருத்தாசலம்:
நல்லுார் அடுத்த வலசை கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியில் நிலையம் சார்பில், பயிர் வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சிக்கு, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் தலைமை தாங்கி, பயிர் வகை பயிர்களில் விதை உற்பத்தி, சாகுபடி தொழில்நுட்பங்கள், நிலம் தயாரிப்பு, விதை நேர்த்தி செய்யும் முறை, புதிய ரகங்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த களை நிர்வாகம், நுண்ணுாட்ட கலவையின் பயன்பாடு, மண் மற்றும் நீர் பரிசோதனை முறை, டி.என்.ஏ.யு., பயறு ஒன்டர் இலைவழி மூலமாக தெளிக்கும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
மேலும், இந்த பயிற்சியில் பயிர்வகை பயிர்களுக்குக்கேற்ற அனைத்து வகையான பூச்சிகொல்லிகள் மற்றும் பூஞ்சாண கொல்லிகள் பற்றி விளக்கப்பட்டது. இதில், வேளாண் அதிகாரிகள், கிராம விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
