UPDATED : மே 16, 2024 12:00 AM
ADDED : மே 16, 2024 10:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் :
விருதுநகரில் 2023--24ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அளப்பரிய பங்களிப்பை செய்த தனிநபர்கள், ஆலைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற 100 பேருக்கு ஆண்டுதோறும் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்திற்கு 3 நபர்களுக்கு வழங்கப்படும். மாவட்டத்தில் 2023--24ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதிற்கு விண்ணப்பித்த 10 நபர்களில் இருந்து, 3 பேரை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.