தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களை சுரண்டும் சுயநல சக்திகள்: டில்லி பல்கலை கவலை

மாணவர்களை சுரண்டும் சுயநல சக்திகள்: டில்லி பல்கலை கவலை

மாணவர்களை சுரண்டும் சுயநல சக்திகள்: டில்லி பல்கலை கவலை


UPDATED : ஜூலை 24, 2026 03:10 PM

ADDED : ஜூலை 24, 2026 03:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2026 03:10 PM ADDED : ஜூலை 24, 2026 03:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, சில சக்திகள் தங்களின் சுயநலத்துக்காக சுரணடி வருகின்றன என டில்லி பல்கலை தெரிவித்துள்ளது.

டில்லியில் சி.ஜே.பி., இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு வரும்படி அவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், அதனை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

இந்நிலையில், டில்லி பல்கலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


மாணவர்களின் கவலையையும், வேதனையையும் உணர்கிறோம். அவர்களின் அச்சங்களை நீக்குவதற்கு பதிலாக சில சுயநல சக்திகள் சுரண்டுவது துரதிர்ஷ்டவசமானது. தற்போது நிலைமையை அமைதிப்படுத்தி, அவர்களின் மன உளைச்சலை குறைப்பதே உடனடி தேவை.

அப்போது தான் மாணவர்களால் உண்மையிலேயே தங்களது படிப்பிலும், எதிர்காலத்திலும் கவனம் செலுத்த முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us