செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
UPDATED : ஆக 15, 2026 05:13 PM
ADDED : ஆக 15, 2026 05:14 PM
நாமக்கல்:
நாமக்கல், செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி, ஐ.சி.டி., அகாடமி இணைந்து, மைக்ரோசாப்ட் அஸ்யூர் மற்றும் ஏஜன்ட் டெவலப்பர் என்ற தலைப்பில், 5 நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தின.
இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவிற்கு, செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர் பாபு தலைமை வகித்தார்.செயலாளர் கவித்ரா நந்தினி, செயல் இயக்குனர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் ராமபாலன் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதன் அவசியத்தையும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கல்வித் துறையில் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப அமர்வுகளை ஐதராபாத்தை சேர்ந்த முதன்மை ஏ.ஐ., பொறியாளர் மற்றும் முன்னணி பேக்கெண்ட் ஆர்க்கிடெக்ட் ஆக பணியாற்றும் முகமது ரஹீல் வழிநடத்தினார்.
அவர், அஸ்யூர் ஏ.ஐ., செய்திகள் மற்றும் நுண்ணறிவு முகவர் உருவாக்கம் குறித்த நேரடி பயிற்சி அனுபவத்தை வழங்கினார். பயிற்சி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, முனைவர் சத்யா மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு அலுவலர் ஜெயசீலன் ஆகிய, இருவரும் இணைந்து ஒருங்கிணைந்து நடத்தினர்.
