UPDATED : மே 07, 2024 12:00 AM
ADDED : மே 07, 2024 09:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் :
காரைக்கால் என்.ஐ.டி.,யில் மின் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக கிரிட் இணைக்கப்பட்ட ஒளிமின்னழுத்த இன்வெர்ட்டர் வடிவமைப்பு மற்றும் எம்.பி.பி.டி., செயல்படுத்தல் என்ற தலைப்பில் ஏழு நாள் கருத்தரங்கம் நடந்தது.
விக்ரம் சாராபாய் கழக இயக்குனர் மகரந்த் மாதோ காங்ரேகர், இயக்குநர் உஷா நடேசன் துவக்கி வைத்தனர்.
முனைவர்கள் சுந்தரவரதன், கோப்பெருந்தேவி முன்னிலை வகித்தனர். இக்கருத்தரங்கில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சி, முதுகலை மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.