தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வினாத்தாள் தயாரிப்பு குழு தலைவர்களுக்கு கருத்தரங்கம்

வினாத்தாள் தயாரிப்பு குழு தலைவர்களுக்கு கருத்தரங்கம்

வினாத்தாள் தயாரிப்பு குழு தலைவர்களுக்கு கருத்தரங்கம்


UPDATED : செப் 03, 2026 06:33 PM

ADDED : செப் 03, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2026 06:33 PM ADDED : செப் 03, 2026 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்:
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில், சேலம் பெரியார் பல்கலையில், வினாத்தாள் தயாரிப்பு குழு தலைவர்களுக்கான கருத்தரங்கம் நேற்று நடந்தது. மன்ற துணைத்தலைவர், விஜயகுமார் தலைமை வகித்தார்.

அதில் போட்டித் தேர்வுகளின் கடினத்தன்மை, அவற்றில் இடம் பெறும் வினாக்களின் தரத்தை சுட்டிக்காட்டி, அவற்றுடன் ஒப்பிடும் போது, உயர்கல்வி தேர்வுகளின் வினாத்தாள்கள், மாணவர்களின் உண்மையான அறிவுத்திறன் மற்றும் சிந்தனைத்திறனை வெளிக்கொணரும்படி வடிவமைக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் பாடத்திட்ட வடிவமைப்பு, கற்றல் விளைவுகளுடன் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்தல், மதிப்பீட்டு முறைகள், பகுப்பாய்வு வினாக்களை உருவாக்குதல் மற்றும் உயர்நிலை சிந்தனை திறன்களை மதிப்பிடும் வினாத்தாள் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முனைவர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.

சேலம் கலெக்டர் இளம் பகவத், பல்கலை துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலை, கல்லுாரியில் பணியாற்றும், வினாத்தாள் தயாரிப்பு குழு தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us