sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்

/

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்


UPDATED : பிப் 11, 2026 02:22 PM

ADDED : பிப் 11, 2026 02:24 PM

Google News

UPDATED : பிப் 11, 2026 02:22 PM ADDED : பிப் 11, 2026 02:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.

கதிர்காமம், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் சிவக்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பதிவாளர் ராஜேஷ்குமார் சிங் நோக்கவுரை ஆற்றினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் முத்து மீனா வாழ்த்தி பேசினார். யூனியன் பிரதேச குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சிவராமன் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசினார்.

பள்ளிக்கல்வி துணை இயக்குநர் சிவகாமி, சமக்ர சிக் ஷா மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ஜெயப்பிரியா, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் ரீனா ஐஸ்வர்யா ஆகியோர் இளஞ்சிறார்களின் நீதி தலைப்பில் பேசினர்.

ஒருங்கிணைப்பாளர் கவுரி நன்றி கூறினார். இதில், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us