தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செந்தில் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., மாணவ, மாணவியர் சாதனை

செந்தில் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., மாணவ, மாணவியர் சாதனை

செந்தில் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., மாணவ, மாணவியர் சாதனை


UPDATED : ஏப் 21, 2026 07:07 PM

ADDED : ஏப் 21, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2026 07:07 PM ADDED : ஏப் 21, 2026 07:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் செந்தில் பப்ளிக் பள்ளிகள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், சிறந்த மதிப்பெண்கள் பெற்று, செந்தில் குழும பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளன.

இந்த சிறப்பான சாதனையை முன்னிட்டு, 2026ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, செந்தில் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடிக்கு மேல் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பள்ளியின் முதன்மை மாணவர்களாக, கவிகுமரன், சஜீந்தனா ஆகியோர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளனர்.

மொத்தத்தில், பள்ளியின் சராசரி 88 சதவீதமாக பதிவாகியது. 2 மாணவர்கள் 497 மற்றும் 2 மாணவர்கள் 496 மதிப்பெண்களை பெற்று சிறப்பித்தனர். 4 மாணவர்கள் 495 மதிப்பெண்களையும், 5 மாணவர்கள், 493 மதிப்பெண்களையும் பெற்றனர்.

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் தியா தர்ஷனா, இளன் செந்தில், கனிஷ்கா மற்றும் லிவிதாஸ்ரீ ஆகியோர், 493 மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்றனர். இவர்களுக்கு XI மற்றும் XII வகுப்புகளில் தொடர்ந்து படிக்க தலா ரூ.1,26,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஹாசினி, கவின், நிவாஷினி, ஸ்ரீநிவாசன் ஆகியோர் 492 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றனர்.

இவர்களுக்கு XI மற்றும் XII வகுப்புகளில் தொடர்ந்து படிக்க தலா ரூ.1,09,200 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஹர்ஷித், செழியன், பிரியம்வதன் ஆகியோர் 491 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பெற்றனர்; இவர்களுக்கு XI மற்றும் XII வகுப்புகளில் தொடர்ந்து படிக்க தலா ரூ.92,400 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 243 சென்டம் பெறப்பட்டுள்ளன. அதில் தகவல் தொழில்நுட்பத்தில் 197, தமிழ் 40, சமூக அறிவியல் 5, அறிவியல் 1 என அதிகபட்ச சென்டங்கள் பதிவாகியுள்ளன. தமிழ், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் ஐ.டி., பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெறப்பட்டுள்ளன. ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் அதிகபட்சமாக 99 மதிப்பெண்கள் பெறப்பட்டுள்ளன.

விழாவில் தலைவர் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், முதன்மை முதல்வர் ஸ்ரீநிவாசன், முதல்வர் டாக்டர் மனோகரன், துணை முதல்வர் நளினி, நிர்வாக அலுவலர் பிரவீன் குமார் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மெர்சி ஜாய்ஸ் கமலம், கருணாம்பிகை உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us