ம.பி.,யி்ல் குழந்தைகளுடன் மதிய உணவை பு(ரு)சித்த ஆடுகள்: இணையத்தில் வீடியோ வைரல்
ம.பி.,யி்ல் குழந்தைகளுடன் மதிய உணவை பு(ரு)சித்த ஆடுகள்: இணையத்தில் வீடியோ வைரல்
UPDATED : டிச 15, 2025 10:10 PM
ADDED : டிச 15, 2025 10:11 PM
கட்னி:
ம.பி.,யில் குழந்தைகளுடன் ஆடுகள் மதிய உணவை பு(ரு)சிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
ம.பி., மாநிலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையம் மூலமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநிலத்தின் கட்னி மாவட்டதில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் திமர்கோடா தாலுகாவுக்கு உட்பட்ட கோத்தி கிராமத்தின் செஹ்ரா டோலா பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு மதியஉணவு வழங்கப்பட்டது.
அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆடு ஒன்று குழந்தைகளுடன் மதிய உணவை ருசித்தது.மேலும் குழந்தைகள் உணவருந்தும்போது அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் யாரும் அருகில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோ வைரல் ஆனது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட பஞ்., தலைமை செயல் அதிகாரி ஹர்சிம்ரன்பிரீத் கவுர் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறினார்.
மேலும் மகளிர் மற்றும்குழந்தைகள் மேம்பாட்டு துறையின் திட்ட அதிகாரி வன்ஸ்ரீ குர்வேதி அங்கன்வாடி மேற்பார்வையாளர் அனிதா பிரதான், மற்றும் அங்கன்வாடி பணியாளர் மீனா பைகா ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

