UPDATED : அக் 05, 2024 12:00 AM
ADDED : அக் 05, 2024 10:02 AM

ஜப்பானில் உள்ள என்.ஐ.எம்.எஸ்., எனும் 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மெட்டீரியல் சயின்ஸ்' கல்வி நிறுவனத்தில் இந்திய கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் குறுகியகால படிப்பை படிக்கலாம்.
ஐ.சி.ஜி.பி., எனும் சர்வதேச ஒத்துழைப்பு கல்வி திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் முழுநேர பிஎச்.டி., மாணவர்கள், 6 முதல் 12 மாதங்கள் வரை ஜப்பானில் படிக்க முடியும்.
உதவித்தொகை:
தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பல்வேறு செலவினங்களுக்காக மாதம் 1,20,000 யென்களை என்.ஐ.எம்.எஸ்., கல்வி நிறுவனம் உதவித்தொகையாக வழங்குகிறது. கல்விக் கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 2
விபரங்களுக்கு:
https://www-nims-go-jp/