தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செவித்திறன் பாதிப்பு மாணவர்களுக்கு சைகை மொழி வீடியோக்கள்

செவித்திறன் பாதிப்பு மாணவர்களுக்கு சைகை மொழி வீடியோக்கள்

செவித்திறன் பாதிப்பு மாணவர்களுக்கு சைகை மொழி வீடியோக்கள்


UPDATED : நவ 11, 2025 10:40 AM

ADDED : நவ 11, 2025 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2025 10:40 AM ADDED : நவ 11, 2025 10:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளிகளில் படிக்கும், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ - மாணவியருக்கு, கல்வி கற்பிப்பதற்காக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாநில இயக்ககம் சார்பில், அரை மணி நேர சைகை மொழி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

இவை, கல்வி தொலைக்காட்சியில், நேற்று முதல், காலை 11:00 மணி மற்றும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றன. இதில், ஆங்கில எழுத்துக்கள், எண்கள், வார நாட்கள், நிறங்கள், வாழ்த்துகள், மாதங்கள், உணவுப் பொருட்கள், குடும்ப உறுப்பினர்கள், நடத்தைகள், வெளிப்பாடுகள் உள்ளிட்ட பாடங்கள் வீடியோக்களாக தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றை, 'https://youtu.be/K1nhrc-1Y6M' என்ற இணைப்பின் வாயிலாக பார்க்கலாம். இவற்றை பார்த்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட, மாணவ - மாணவியருக்கு கற்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us