சிலம்பம் பயிற்சி மாணவர்களுக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கல்
சிலம்பம் பயிற்சி மாணவர்களுக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கல்
UPDATED : ஏப் 16, 2026 07:07 PM
ADDED : ஏப் 16, 2026 07:08 PM

வில்லியனுார்:
சிலம்ப கலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பட்டயம் வழங்கும் விழா நடந்தது.
புதுச்சேரி சிலம்பக் கலைக் கழகம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலம்பாட்ட குழு ஆகியன இணைந்து சிலம்ப கலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பட்டயம் வழங்கும் விழா நடந்தது.
வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கலைக் கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு சிலம்ப கலை குழுக்களின் சார்பில், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிலம்ப மாணவர்கள், தங்களது அனுபவத்தை செய்து காட்டி மஞ்சள், ஆரஞ்சு, பச்சை போன்ற தகுதி பட்டைகளைகளுக்கு தேர்வானார்கள்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜூனியர் அக்கவுண்ட் ஆபிசர் கவுரி நார்த் ஷர்மா, இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் ஆயுர்வேதா மருத்துவர் ரமணன் ஆகியோர் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
ஏற்பாடுகளை கலைமாமணி ராஜ்குமார், ஆசான்கள் வேலன், குணாளன், விக்ரம், விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
