அரசு பள்ளிக்கு சிங்கப்பூர் தொழிலதிபர் ரூ.1.40 கோடி நிதி
அரசு பள்ளிக்கு சிங்கப்பூர் தொழிலதிபர் ரூ.1.40 கோடி நிதி
UPDATED : மே 13, 2024 12:00 AM
ADDED : மே 13, 2024 09:27 AM
அவனியாபுரம்:
மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டவும், மேஜை, நாற்காலிகள், மின்சாதனங்கள் உட்பட தளவாடங்கள் வாங்க சிங்கப்பூர் வாழ் தமிழ் தொழிலதிபர் திலீப்பாபு ரூ. 1.40 கோடி வழங்கினார்.
அரசின் நம்ம பள்ளி, நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. தொடக்க கல்வி அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் வட்டார கல்வி அலுவலர் பேபி முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, திருநகர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பலராமன் பங்கேற்றனர். திலீப்பாபு ஏற்கனவே திருநகர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட ரூ. 1.40 கோடி, அவனியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 31 லட்சம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.