சிங்கப்பெண் அதிரடிப்படை கல்லுாரியில் விழிப்புணர்வு
சிங்கப்பெண் அதிரடிப்படை கல்லுாரியில் விழிப்புணர்வு
UPDATED : ஆக 08, 2026 05:23 PM
ADDED : ஆக 08, 2026 05:24 PM
காரமடை:
காரமடையில் உள்ள டாக்டர்.ஆர்.வி., கல்லுாரியில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்த்துறை தலைவர் ஜெயந்தி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை போலீஸ் எஸ்.ஐ., அமிர்த பிரியா தலைமையிலான குழுவினர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, பெண்களின் சுயபாதுகாப்பு, இணையவழி குற்றங்களில் இருந்து பாதுகாப்பு, போதைப்பொருட்களின் தீமைகள், சாலை விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் அவசர கால உதவி எண் '1091'ன் பயன்பாடுகள், நிழல் செயலியை பயன்படுத்தும் முறைகள், மாணவியர் தன்னம்பிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் சமூகத்தில் செயல்பட வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கினர்.
கல்லுாரியின் நிர்வாக மேலாளர் மனோகரன், கணிதவியல் துறை தலைவர் உமாபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
