சிப்காட் தொழிற்பூங்கா: மெட்டுவாவி மக்கள் எதிர்ப்பு
சிப்காட் தொழிற்பூங்கா: மெட்டுவாவி மக்கள் எதிர்ப்பு
UPDATED : டிச 16, 2024 12:00 AM
ADDED : டிச 16, 2024 11:22 AM
கிணத்துக்கடவு:
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவியில், அதிகளவு விவசாய நிலம் உள்ளது. இங்கு, கால்நடை வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, என விவசாயம் சார்ந்த தொழில்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது, இப்பகுதியில், 1,310 ஏக்கர் பரப்பில், சிப்காட் தொழில் பூங்கா அமைக்க, சர்வே பணிகள் நடப்பதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மெட்டுவாவியில் சிப்காட் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
சர்வே செய்யப்பட்ட பகுதிகளில், சில இடங்களில் விளைநிலம், லே - அவுட்டுகள், குடியிருப்புகள், காலியிடம் உள்ளது. அதனால், சிப்காட் தொழில் பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மெட்டுவாவி ஊராட்சி அலுவலகம் முன் நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது.
இதில், எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், சூலுார் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.