தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யு - 14 கிரிக்கெட் போட்டி சர் முத்தா பள்ளி அபார வெற்றி

யு - 14 கிரிக்கெட் போட்டி சர் முத்தா பள்ளி அபார வெற்றி

யு - 14 கிரிக்கெட் போட்டி சர் முத்தா பள்ளி அபார வெற்றி


UPDATED : பிப் 14, 2026 11:14 AM

ADDED : பிப் 14, 2026 11:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2026 11:14 AM ADDED : பிப் 14, 2026 11:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளிகளுக்கு இடையிலான 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், சர் முத்தா பள்ளி, 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை, விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலை சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான 'வேந்தர் கணேசன் கோப்பை'க்கான 'யு - 14' கிரிக்கெட் போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம் பையனுாரில் நடக்கின்றன.

இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 21 பள்ளிகள் பங்கேற்று மோதுகின்றன.

நேற்று காலை நடந்த லீக் ஆட்டத்தில், சேத்துப்பட்டு சர் முத்தா பள்ளி - செங்கல்பட்டு கோகுலம் பள்ளி அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த சர் முத்தா அணி, 30 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. இதையடுத்து, கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய கோகுலம் அணி, சர் முத்தா அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 17.1 ஓவர்களில் 96 ரன்களுக்கு சுருண்டது.

இதன் மூலம், 113 ரன்கள் வித்தியாசத்தில் சர் முத்தா பள்ளி அணி வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில், கொட்டிவாக்கம் நெல்லை நாடார் பள்ளி அணி, 30 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது.

எளிய இலக்கை துரத்திய கொளப்பாக்கம் ஒமேகா பள்ளி, 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் அடித்து வெற்றியை ருசித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us