தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை அறிவியல் கல்லுாரிகளில் திறன் சார்ந்த பயிற்சி வகுப்புகள்

கலை அறிவியல் கல்லுாரிகளில் திறன் சார்ந்த பயிற்சி வகுப்புகள்

கலை அறிவியல் கல்லுாரிகளில் திறன் சார்ந்த பயிற்சி வகுப்புகள்


UPDATED : நவ 28, 2026 03:15 PM

ADDED : நவ 28, 2026 03:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 03:15 PM ADDED : நவ 28, 2026 03:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்காக, ஒரு பாடப்பிரிவுக்கு, ஆறு திறன்சார் பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாக, மாநில உயர் கல்வி மன்ற தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ மாணவியர் வேலைவாய்ப்பை பெறுவதற்கு, அவர்கள் துறை சார்ந்த திறன்களை பெற்றிருப்பது அவசியம். இதை கருத்தில் வைத்து, மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்த ஆண்டு முதல், அவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு பாடப்பிரிவுக்கு ஆறு திறன் பயிற்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுக்கும் ஒரு திறன் பயிற்சி வகுப்பு வீதம் நடத்தப்படும். உதாரணமாக, வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு, வருமான வரி செலுத்துதல்; தணிக்கை அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

இதழியல் துறை மாணவர்களுக்கு, தொலைபேசி புகைப்பட பயிற்சி, செய்தி உருவாக்கம், செய்தியின் உண்மைத் தன்மையை கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். இதன் வழியே, மாணவர்கள் படிக்கும்போதே, தங்களின் துறை சார்ந்த திறன்களை நேரடியாக கற்றுக் கொள்ள முடியும். எளிதாக வேலைவாய்ப்புகளை பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us