sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தனித்திறன்களை வளர்த்தெடுக்கும் போட்டிகள் கலை ஆர்வத்தை துாண்டும் விதமாக பயிற்சி

/

தனித்திறன்களை வளர்த்தெடுக்கும் போட்டிகள் கலை ஆர்வத்தை துாண்டும் விதமாக பயிற்சி

தனித்திறன்களை வளர்த்தெடுக்கும் போட்டிகள் கலை ஆர்வத்தை துாண்டும் விதமாக பயிற்சி

தனித்திறன்களை வளர்த்தெடுக்கும் போட்டிகள் கலை ஆர்வத்தை துாண்டும் விதமாக பயிற்சி


UPDATED : பிப் 08, 2026 11:34 AM

ADDED : பிப் 08, 2026 11:36 AM

Google News

UPDATED : பிப் 08, 2026 11:34 AM ADDED : பிப் 08, 2026 11:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:
காலத்திற்கேற்ற மாறுதல்கள் கல்வியிலும் புகுந்துவிட்டது. பாட புத்தகங்கள், எழுத்துப் பலகைகள் ஓய்ந்து போய் கணினி வழியில் கல்வி கற்கும் காலம் வந்துவிட்டது.

அதிலும் கல்வி கற்பதில், பாட அறிவை மட்டுமல்லாமல் திறன் சார்ந்த கல்வி அறிவையும் ஊட்டி கலைகளிலும், தனி திறன்களிலும் மாணவர்களை தலைசிறந்த தலைமைகளாக உருவாக்குவதில் ஆசிரியர்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல் அக் ஷயா கல்வி குழுமம் தன் பணியை செவ்வனே செய்து வருகிறது.

இந்நிலையில் அக் ஷயா கல்வி குழுமம், ஓம் சாந்தி சி.பி.எஸ்.இ., பள்ளி, நஞ்சப்ப கவுண்டர் கல்வியியல் கல்லூரி, அம்மா இல்லம் ஆகியவை இணைந்த ஆண்டு விழா, விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் படைப்பாற்றலும், அறிவாற்றலும் ஒருங்கே சங்கமிக்கும் வகையில் அமைந்ததென்றால் அது மிகையானது அல்ல.

கண் கவர் நிகழ்ச்சிகளும், பிரம்மாண்ட அமைப்புகளும், அதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களின் உரை என அனைத்துமே சிந்தனைக்கு சரியான தீனி போட்டன. கோலாகலமாக நடந்து முடிந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கருத்துக்கள் இதோ....

தனித்திறன்கள் ஊக்குவிப்பு


பழனிசாமி, தாளாளர், அக் ஷயா வித்யாலயா கல்விக்குழுமம்: எல்லா தரப்பு மாணவர்களையும் கல்வி, கலை இரண்டிலும் ஆசிரியர்கள் சிறப்பானவர்களாக தயார் செய்திருக்கிறார்கள். ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் மாணவர்கள் வளர்தெடுக்கப்படுகிறார்கள்.

அவர்களின் தனித்திறன்கள் ஊக்குவிக்கப்படுகிறது. மாணவர்களிடம் இருக்கும் நிறை, குறைகளை களைந்து அவர்களை கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த மாணவர்களாக உயர்த்துவதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூட்டணி அவசியம். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் இன்னமும் அக்கறை எடுத்து செயல்பட பெற்றோர்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

பாராட்டுக்குரிய தன்னம்பிக்கை


சுதர்சன், பெற்றோர்: ஆண்டுவிழாவில் மாணவர்களின் நேர்த்தியும், ஆசிரியர்களின் கடின உழைப்பும் தெரிந்தது. குழந்தைகளின் நடனம், நாடகம், பிற கலை நிகழ்ச்சிகள் வியக்க வைத்தன. அவர்களின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது.

பிரம்மாண்ட தோற்றத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரின் கண்களுக்கும் விருந்து படைத்தது போல ஏற்பாடுகள் அமைந்திருந்தது.

ஊக்கமளித்தது


மோனிகா, மாணவி, ஓம் சாந்தி சி.பி.எஸ்.இ., பள்ளி: ஒவ்வொரு குழந்தைக்கும் மேடையில் வாய்ப்பளித்தது மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணர உதவியாக இருந்தது. சிறப்பு விருந்தினர்களின் உரையும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமும் ஊக்கமளிப்பதாக இருந்தது. நிகழ்ச்சிகளின் கருப்பொருள் மிகவும் படைப்பாற்றலுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பான கல்வி சூழல்


சையது முகமது, பெற்றோர், மா.மூ.கோவிலுார்: அனுபவமிக்க, அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்கள் மாணவர்களை தனிப்பட்ட கவனத்துடன் வழி நடத்துகின்றனர். மாணவர் நலனை முன்னிலைப்படுத்தி ஒழுக்கமான, பாதுகாப்பான கல்வி சூழலை உருவாக்கி உள்ளது. நுாலகம், கணினி, அறிவியல் ஆய்வகங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு துணைபுரிகின்றன.

பேராசிரியர்கள் கற்பித்தல் திறன், ஐ.சி.டி., பயன்பாடு, மைக்ரோ டீச்சிங் போன்றவற்றில் சிறந்த பயிற்சியை வழங்குகின்றனர்.

ஆர்வத்தை துாண்டும் பயிற்சிகள்


நிலோபர் ஷப்ரின், கல்வியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவி: மாணவர்களின் முழுமையான கல்வி வளர்ச்சிக்கு கல்லுாரி உட்கட்டமைப்புகள் உதவுகின்றன. மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாது தனித்திறன்களை வளர்தெடுக்க விளையாட்டு போட்டிகள், கலை ஆர்வத்தை துாண்டும் விதமான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

கல்வியோடு ஒழுக்கம், திறன் வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் சிறந்த கல்வியியல் நிறுவனமாக செயல்படுகிறது.






      Dinamalar
      Follow us